வெளிப்படைத்தன்மை தேவை: ராமகிருஷ்ணன் வலியுறுத்து

வெளிப்படைத்தன்மை தேவை: ராமகிருஷ்ணன் வலியுறுத்து

1 mins read

சென்னை: காலியாக உள்ள இடங்களுக்கு கல்லூரி முதல்வர்களை வெளிப்படையாக நியமிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 63க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம் செய்யப்படாமல் பொறுப்பு முதல்வர்களை நியமித்து அவர்களுக்கு மாதா மாதம் கணிசமான தொகை சிறப்பு ஊதியமாகத் தரப்படுவதாகச் சுட்டிக்காட்டி உள்ளார். முதல்வர் இல்லாததால் கல்லூரி நிர்வாகங்கள் முறையாக நிர்வகிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.