இரண்டாவது சுதந்திரப் போருக்கான நேரமிது: நீதிமன்றம் கருத்து

இரண்டாவது சுதந்திரப் போருக்கான நேரமிது: நீதிமன்றம் கருத்து

2 mins read

சென்னை: சுதந்திரப் போராட்டத் தில் ஈடுபட்டு நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்களை வணங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் முனு சாமி என்பவர் தமக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போதே நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது. ஊழலுக்கு எதிரான இரண்டா வது சுதத்திரப் போராட்டத்தை தொடங்கும் நேரம் வந்துவிட்டதாக வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் குறிப்பிட்டார். முனுசாமி தமது 14 வயதில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தாக தமது மனுவில் குறிப்பிட் டுள்ளார். ஆனால் அரசுத் தரப்பு இதை ஏற்கவில்லை. நேற்று இவ்வழக்கில் நீதிபதி வைத்தியநாதன் தீர்ப்பு வழங்கி னார்.

அப்போது முனுசாமி தமது 14 வயதில் சுதந்திரப் போராட் டத்தில் பங்கேற்கவில்லை என்ற அரசுத் தரப்பு வாதத்தை அவர் நிராகரித்தார். "சுதந்திரப் போராட்ட வீரரான முனுசாமிக்கு மத்திய அரசு இரண்டு மாதங்களுக்குள் அவ ருக்குரிய ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். "ஊழலுக்கு எதிரான இரண் டாவது சுதத்திரப் போராட்டத்தை தொடங்கும் நேரம் வந்துவிட்டது. இதனை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்," என்றும் நீதிபதி வைத்தியநாதன் தமது தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக மத்திய, மாநில அரசுகளின் செயல்பாட்டை நீதிமன்றங்கள் கடுமையான வார்த்தைகளில் சாடி வருகின்றன. தமிழக அரசுத் துறைகளில் கண் மூடித்தனமான ஊழல்கள் நடை பெற்று வருவதாக அண்மையில் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியிருந்தார்.