சென்னை: தமிழகத்தைப் புரட்டிப் போட்ட ஓகி புயலால் ரூ.1,000 கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் ஓகி புயலில் சிக்கி சின்னபின்னமாகி. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், லட்சக் கணக்கான வாழைகள், ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளும் சேதம் அடைந்தன. இதையடுத்து புயல் பாதிப்புகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.
5 நாட்களாக நடைபெற்ற ஆய்வின் முடி வில் குமரி மாவட்டத்தில் மட்டும் ரூ.170 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள் ளது. மாநிலத்தின் இதர பகுதிகளையும் கணக்கில் கொள்ளும்போது சேத மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. இதற்கிடையே நாடாளு மன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து தமிழக புயல் பாதிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். குமரி மாவட்டத்துக்கு முதல்வர் விரைவில் நேரில் சென்று வெள்ள பாதிப்பு களைப் பார்வையிடுவார் என்று அவர் கூறியுள்ளார்.

