சென்னை: ஆர்கே நகர் தொகுதி யில் உள்ள இளையர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிப் பார்கள் என்று நாம் தமிழர் கட்சி யின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அத்தொகுதியில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர் கலைக் கோட்டுதயத்திற்கு ஆதரவாக அவர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்கே நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றியும் பயனில்லை என்றார். "விஷால் வேட்புமனு நிரா கரிப்பு ஏன் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. இது வெறும் இடைத்தேர்தல் மட்டு மல்ல, இது ஒரு போர். "ஒன்பது ஹெலிகாப்டர் களைக் கொண்டு தொலைந்து போன மீனவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறது கேரள அரசாங்கம். "ஆனால் இங்கு தமிழகத் திலோ தெருவுக்குத் தெரு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள்," என்று சீமான் அதிருப்தி தெரிவித்தார்.
சீமான்: இளையர்களே வெற்றியைத் தீர்மானிப்பர்
1 mins read

