சென்னை: இடைத் தேர்தலில் அதிமுகவை முந்தி இரண்டாம் இடம் பிடிப்பார் தினகரன் என அண்மைய கருத்துக்கணிப்பில் தெரிய வந்ததை அடுத்து அவர்கள் தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது. ஆர்கே நகரில் தனக்கு ஒதுக் கப்பட்ட சின்னமான 'பிரஷர் குக் கரை' கையில் ஏந்தியபடி புன் சிரிப்புடனும் நம்பிக்கையுடனும் வீதி வீதியாக வலம்வந்து வாக்கு சேகரித்து வருகிறார் தினகரன். சின்னத்தை பிரபலப்படுத்த வேண்டி இருப்பதால் தன்னுடன் வருபவர்களும் குக்கரை ஏந்தி வரும்படி அவர் அறிவுறுத்தி இருப்பதாகத் தகவல். பிரசாரத்தில் ஈடுபடுபவர்க ளுக்கு தினமும் ரூ.500 வழங்கப் படுவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், உண்மையாகவே குக்கருடன் வருபவர்களுக்கு 'கூடுதல் கவனிப்பு' கிடைக்கிற தாம். குக்கர் சின்னம் வரையப்பட்ட பதாகைகளை ஏந்தி வருபவர்க ளுக்கும் கணிசமான தொகை வழங்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனக்கு வழங்கப்பட்ட சின்னமான குக்கருடன் ஆர்கே நகரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் தினகரன். படம்: தகவல் ஊடகம்

