கரை திரும்பாத மீனவர்கள்; நீடிக்கும் கண்ணீர்ப் போராட்டம்

கரை திரும்பாத மீனவர்கள்; நீடிக்கும் கண்ணீர்ப் போராட்டம்

1 mins read
be36ab02-7951-43e0-bb29-6ca175a80318
-

குமரி: ஓகி புயல் வீசிய போது கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலை யில், அவர்களது குடும்பத்தார் தொடர் போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர். இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் மீது போலிசார் வழக்குப்பதிவு செய் துள்ளனர். ஓகி புயல் குறித்து விவரம் அறியாமல் கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான தமிழக மீன வர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களில் பலர் குஜராத், மகாராஷ்டிரா, லட்சத்தீவு, கேரளா கடற்பகுதிகளில் கரை ஒதுங்கி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும் புயல் ஓய்ந்து பல நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் மீனவர்கள் இதுவரை ஊர் திரும் பாததால் அவர்களது குடும்பத்தார் கண்ணீர் மல்க காத்துக் கிடக் கின்றனர். குறிப்பாக குமரி மாவட் டத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை ஊர் திரும்பவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள். படம்: இணையம்