நடுவானில் நடிகைக்கு பாலியல் தொல்லை; மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது

நடுவானில் நடிகைக்கு பாலியல் தொல்லை; மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது

1 mins read
256cd43e-c186-46a4-972c-d0426320a9de
-

பிரபல 'டங்கல்' பாலிவுட் திரைப் படத்தில் நடித்த 17 வயது நடிகை விமானத்தினுள் பாலியல் தொந் தரவு செய்யப்பட்டதாகக் கூறப் படும் சம்பவத்தில் மும்பையைச் சேர்ந்த 39 வயது ஆடவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஸைரா வாசிம் எனப்படும் அந்த நடிகை கடந்த சனிக்கிழமை இரவு டெல்லியிலிருந்து மும்பை செல்லும் ஏர் விஸ்தாரா விமா னத்தில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தமது இருக்கைக் கைப்பிடியில் ஏதோ உணர்ந்ததாகவும் அது பின்னி ருக்கையில் இருந்த நடுத்தர வயது பயணி ஒருவரின் கால் என்று தெரிய வந்ததாகவும் ஸைரா தமது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அப்போது தாம் அரை தூக்கத் தில் இருந்ததாகக் கூறிய அவர், தொடர்ந்து 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை அந்த பாலியல் தொந்தரவு நீடித்ததாகவும் தமது பின்புறத்திலும் கழுத்துப் பகுதி யிலும் அந்த ஆடவரின் கால் நுனி மெதுவாக தடவியதைத் தம் மால் தெளிவாக உணர முடிந்த தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அச்சம்பவத்தை காணொளியாகப் பதிவு செய்ததாகவும் ஆனால் வெளிச்சம் குறைவாக இருந்த தால் படம் தெளிவாக இல்லை என்றும் ஸைரா விவரித்துள்ளார்.

ஸைரா வாசிம். படம்: ஊடகம்