குஜராத் தேர்தல் முடிவில் பாதிப்பை ஏற்படுத்த பாகிஸ்தான் முயன்று வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறிய தற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் தேர்தல் பிரசாரம் செய்த மோடி அண்மையில் நீக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யரின் வீட்டில் மூன்று மணி நேரம் ரகசியக் கூட்டம் ஒன்று நடைபெற்றதாகத் தெரிவித்தார். பாகிஸ்தான் தூதர், முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் காங்கிரஸ் துணை அதிபர் ஹமித் அன்சாரி ஆகி யோர் இக்கூட்டத்தில் பங்கேற்ற தாகவும் மோடி கூறினார். குஜராத் தேர்தல் முடிவுகளைச் சீர்குலைக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித் தார். ஆனால், இது மோடியின் கட்டுக்கதை என்று இஸ்லாமாபாத் கூறி உள்ளது. "உங்கள் நாட்டில் நடைபெறும் தேர்தல் சண்டையில் எங்களை இழுக்காதீர்கள்," என பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் சதி: மோடிக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு
1 mins read

