மிகவும் பரபரப்பாக பிரசாரம் நடை பெற்றுக் கொண்டு இருக்கும் ஆர் கே நகரில் திட்டமிட்டபடி இடைத் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடை பெறுமா என்ற சந்தேகம் எழத் தொடங்கி உள்ளது. கோடிக்கணக்கில் வாக்காளர் களுக்குப் பணப்பட்டுவாடா செய் யப்பட்ட புகார் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் வாக்களிப்புக்கு இரு நாட்கள் எஞ்சியிருந்த வேளையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இப்போதும் பணப்பட்டுவாடா தாராளமாக செய்யப்பட்டு வருவ தாக பாஜகவே நேரடியாகக் குற்றம் சாட்டி வருகிறது. இதுபற்றி பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகை யில், "தேர்தல் நேர்மையாக நடை பெறவேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். முறையாக தேர்தலை நடத்தமுடியாவிட்டால் மீண்டும் ரத்துசெய்ய வேண்டும். கடந்த முறை பணப்பட்டுவாடாவைக் கார ணம் காட்டி தேர்தல் ரத்து செய் யப்பட்டது. இப்போதும் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா பட்டப் பகலிலேயே நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது," என்றார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்தாகும் என்கிறது சசிகலா தரப்பு
1 mins read

