கால்வாய்க்குள் கவிழ்ந்த கார்: இளையர்கள் நால்வர் பரிதாப பலி

கால்வாய்க்குள் கவிழ்ந்த கார்: இளையர்கள் நால்வர் பரிதாப பலி

1 mins read
dcd5ea0e-280b-41bf-9bb0-980fae6010a3
-

பொள்ளாச்சி: கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் நால்வர் பலியாகினர். கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மற் றொரு நபர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த 19 வயதான ஆல்பா தனது நண் பர்கள் நால்வருடன் கடந்த 7ஆம் தேதி மூணாறுக்குச் சுற்றுலா சென்றிருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை ஐவரும் காரில் ஊர் திரும்பிக் கொண்டி ருந்தனர். பொள்ளாச்சி அருகே கெடி மேட்டு பகுதிக்கு வந்த போது, அங்குள்ள கால்வாய் குறுக்கிட்டது. கால்வாயை கடக்க முற்பட்ட போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், கால்வாய் தடுப்புச் சுவர் மீது வேகமாக மோதியது. இதில் தடுப்புச் சுவர் உடைந்ததில் கார் கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இதில் ஆல்பா உட்பட இருவர், வெளியே தூக்கி வீசப்பட்டனர். இச்சம்பவம் காலை சுமார் 7.30 மணியளவில் நிகழ்ந்தபோது கால்வாயில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரில் ஆல் பாவை அவர்கள் மீட்டனர். மற் றொருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் கால்வாயில் விழுந்த கார் 11 அடி ஆழத்தில் மூழ்கியதில் அதில் சிக்கிய மூவரும் உயிரிழந்தனர்.

கால்வாயில் விழுந்த கார் பிறகு மீட்கப்பட்டது. படம்: தகவல் ஊடகம்