குமரியில் 4,000 பேர் கடலில் இறங்கி போராட்டம்

குமரியில் 4,000 பேர் கடலில் இறங்கி போராட்டம்

1 mins read
cdf2c230-2bab-4165-8ea5-b9a1f2ed1952
-

குமரி: ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை உடனடி யாக மீட்க வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் நான்காவது நாளாக நீடித்த போராட்டத்தின் போது சுமார் நான்காயிரம் மீன வர்கள் கடலுக்குள் இறங்கி, தங் கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் பெண்க ளும் குழந்தைகளும் கூட திரளாக கலந்து கொண்டனர். மேலும், சில இடங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டமும் நடைபெற்றது. இத னால் குமரியில் உள்ள மீனவக் கிராமங்களில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டதுடன் போலிசார் தீவிர கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் வீசிய ஓகி புயலின்போது நடுக்கடலில் சிக்கித் தவித்த ஏராளமான தமி ழக மீனவர்கள் மாயமாகி உள்ள னர். அவர்களின் கதி என்னவா யிற்று என்பது இதுவரை தெரிய வில்லை.

ஏராளமான ஆண்களும் பெண்களும் கடலில் இறங்கி முழக்கங்களை எழுப்பினர். படம்: ஊடகம்