ஆப்கானிஸ்தான் பெண் அதிகாரிகளுக்கு சென்னை ராணுவப் பயிலகத்தில் பயிற்சி

ஆப்கானிஸ்தான் பெண் அதிகாரிகளுக்கு சென்னை ராணுவப் பயிலகத்தில் பயிற்சி

1 mins read
3be70491-826e-4786-9bed-1db335f66295
-

இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளித்துள்ள இந்தியா, முதன்முறையாக அந் நாட்டைச் சேர்ந்த 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவப் பயிற்சிப் பயிலகத் தில் நேற்று முன்தினம் ஏகே=47 ரக துப்பாக்கிகளைக் கையாள்வது உள்ளிட்ட ஆயுதப் பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. மொத்தம் 21 நாட்கள் இடம் பெறும் இந்த அடிப்படை ராணுவப் பயிற்சியில் போர்த் தந்திரம், தொலைத்தொடர்பு ஆகியவை குறித்தும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகளின் ஆதிக்கம் கட்டுக் குள் இருந்தாலும் ஒரு சில இடங் களில் இன்னும் அவர்களின் நிழல் படிந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் பெறும் பயிற்சியின்மூலம் ஆயுதங் களைத் திறம்படக் கையாண்டு தலிபான் போராளிகளுக்கு எதிரான போரில் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என்று அந்தப் பெண் அதி காரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள ராணுவப் பயிற்சிப் பயிலகத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்குத் துப்பாக்கி சுட கற்றுத்தரும் இந்திய ராணுவ அதிகாரிகள். படம்: தமிழக ஊடகம்