இந்தியாவையே உலுக்கிய உடு மலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் அவருடைய மனைவி கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட அறுவருக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. பொறியியல் கல்லூரியில் படித்தபோது காதல் வயப்பட்ட உடுமலைப்பேட்டை குமரலிங்கத் தைச் சேர்ந்த சங்கரும் பழநியைச் சேர்ந்த கௌசல்யாவும் திரு மணம் செய்துகொண்டனர். கலப்புத் திருமணம் என்பதால் இதை கௌசல்யா வீட்டினர் கடுமையாக எதிர்த்தனர். இந்நிலையில், 2016 மார்ச் 13ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையத்திற்கு அருகே சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டார். படு காயமடைந்த கௌசல்யா சிகிச் சைக்குப் பின் வீடு திரும்பினார். சாலையின் நடுவே பலர் கண்முன் நிகழ்ந்த இந்தப் படு கொலைச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதன் தொடர்பில் கௌசல்யா வின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித் துரை, கூலிப்படையினர் என 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலிஸ், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது. யாருக்கும் பிணை வழங்கப்பட வில்லை. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
காதல் கணவர் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்து விட்டதாகக் குறிப்பிட்டார் கௌசல்யா. கோப்புப்படம்

