சென்னை: தமிழக போலிசார் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு தமக் காக தேர்தல் களத்தில் பணியாற்று வோர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளார். ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா நடப்பதாகப் புகார் எழுப்பியுள்ள அவர், இது தொடர்பாக நேற்று முன்தினம் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகா ரியைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகாரிகள் நடுநிலை யாகச் செயல்படாவிட்டால் அவர்களை எப்படிக் கையாள்வது என்பது தமக்குத் தெரியும் என எச்சரிக்கும் தொனியில் பேசினார்.
"தேர்தல் முறையாக நடக்க வேண் டும் என்பதால் அமைதியாக உள்ளேன். என் ஆட்களையும் அமைதியாக இருக் கும்படி கூறியுள்ளேன். ஆளும் கட்சி விரக்தியின் உச்சியில் உள்ளது. காவல்துறை ஏவல் துறையாக இருந் தால் நீதிமன்றம் செல்வோம்," என்றார் தினகரன். அதிகாரிகள் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று மிரட்டலுக்காக ஏதும் சொல்லவில்லை என்று குறிப் பிட்ட அவர், உளவுத்துறையினர் தங் களை மறைமுகமாகப் பின்தொடர்வ தாகக் கூறினார். "மதுசூதனனுக்கு வைப்புத் தொகைகூட பறிபோய்விடும் என்ப தால் முதல்வரும் துணை முதல்வரும் இது போன்ற செயல்களில் ஈடுபடு கிறார்கள். அதனால்தான் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்துப் பேசி னேன்," என்றார் தினகரன்.

