எங்கும் பிரசார முழக்கங்கள்: கட்சியினர் முற்றுகையால் திணறும் ஆர்கே நகர்

எங்கும் பிரசார முழக்கங்கள்: கட்சியினர் முற்றுகையால் திணறும் ஆர்கே நகர்

1 mins read
a04290b1-050f-426c-863e-03ec12933459
-

சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்கே நகர் தொகுதியில் எங்கு திரும்பினா லும் அரசியல் கட்சியினரின் பிரசார முழக்கங்கள் எதி ரொலிக்கின்றன. பிரசாரத்தில் பங்கேற்பவர்க ளுக்கு மூன்று வேளை உணவு, இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏதேனும் பானம், கணிசமான தொகை வழங்கப் படுவதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமா னோர் நேரடியாகவோ மறைமுக மாகவோ பிரசாரத்தில் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் தொகுதி முழுவதும் வீதிதோறும் நடைபெற்று வரும் பிரசாரத்தில் அரசியல் கட்சி களின் உள்ளூர், வெளியூர் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். பிரசாரத்தின் போது வேட்பா ளருக்கு ஆரத்தி எடுப்பது, அவர் மீது பூக்கள் தூவுவது, வேட்பாளரை வரவேற்று கோல மிடுவது என பல விஷயங்கள் அரங்கேறுகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் பணப் பரிசு களும் வழங்கப்படுகின்றன.

தேர்தல் பணிக்காக சென்னை வந்திறங்கிய துணை ராணுவப் படையினர். படம்: சதீஷ்