மீனவர்களைக் காப்போம்: முதல்வர் மீண்டும் உறுதி

மீனவர்களைக் காப்போம்: முதல்வர் மீண்டும் உறுதி

1 mins read

குமரி: ஓகி புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கி மாயமான தமிழக மீனவர்களைத் தேடும் பணி ஆழ்கடல் பகுதியில் நீடித்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித் துள்ளார். மீனவர்களைக் காக்க தமிழக அரசு அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற் கொள்ளும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். கடந்த நவம்பர் 30ஆம் தேதி ஓகி புயல் தாக்கியதில் தமிழகத்தின் தென் மாவட்டங்க ளில் பலத்த சேதம் ஏற்பட்டது. அச்சமயம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நூற்றக்கணக் கான மீனவர்கள் மாயமாகி உள்ளனர். மீனவர்கள் கரை திரும்பாத தால் அவர்களது குடும்பத்தார் பரிதவிப்பில் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை உரிய நேரத்தில் மீட்கத் தவறியதாக குற்றம்சாட்டியுள்ள மீனவர் தரப்பு, பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.