பிரான்ஸ் செய்தியாளர் கைது

பிரான்ஸ் செய்தியாளர் கைது

1 mins read

ஸ்ரீநகர்: பிரான்ஸ் நாட்டின் செய்தியாளர் ஒருவர், விசா விதிமுறைகளை மீறி படமும் பேட்டியும் எடுத்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். காஷ்மீரில் 'பெல்லட்' குண்டுகளால் தாக்கப்பட்டவர்களிடம் பிரான்ஸ் நாட்டின் செய்தியாளர் கோமிடி பால் எட்வர்ட் பேட்டியெடுத்து புகைப்படம் பிடித்துள்ளார். ஆனால் அவர் 'பிசினஸ்' விசா மூலம் இந்தியா வந்தவர். இந்த நிலையில் விசா விதிமுறைகளை மீறி அவர் செய்தியாளர் பணியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.