ஜார்கண்ட் மாநிலத்தில் முத்தப் போட்டி

ஜார்கண்ட் மாநிலத்தில் முத்தப் போட்டி

1 mins read
c538c67a-c4a6-481f-8900-8e835966895c
-

ராஞ்சி: ஜார்கண்டில் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்ற முத்தப் போட்டி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பாக்கூர் மாவட்டத்தில் உள்ள லிட்டிபாரா என்ற பகுதியில் நடைபெற்ற பழங்குடியினர் ஆண்டு திருவிழாவில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த லிட்டிபாரா தொகுதி எம்எல்ஏ சைமன் மராண்டியும் கலந்துகொண்டார். விழாவில் பழங்குடியைச் சேர்ந்த தம்பதிகள் கட்டித் தழுவி தொடர்ந்து அடுத்தடுத்து முத்தமிட்டனர். இதன் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதால் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இதையடுத்து சைமன் மராண்டியை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. ஆனால் "இது ஒரு வழக்கமான விழா, தம்பதிகள் முத்தமிடுவதால் அவர்களுக்குள் அன்பு பெருகுகிறது," என்று எம்எல்ஏ திரு சைமன் மாண்டி விளக்கம் அளித்துள்ளார்.

முத்தப் போட்டியில் பங்கேற்ற ஜோடிகள். படம்: இந்திய ஊடகம்