சீன அமைச்சர்: இந்தியா, சீன உறவுக்கு 'டோக்லாம்' பிரச்சினை ஒரு சோதனை

சீன அமைச்சர்: இந்தியா, சீன உறவுக்கு 'டோக்லாம்' பிரச்சினை ஒரு சோதனை

1 mins read
ac89ddce-5d67-4656-927f-7d308b94cce2
-

புதுடெல்லி: இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகள் பங் கேற்ற முத்தரப்புக் கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இந்திய-சீன உறவுக்கு இடையே டோக்லாம் பிரச்சினை ஒரு முக்கிய சோதனை என்றும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறி யுள்ளார். 2017ல் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்று குறிப்பிட்ட அவர், "இந்திய எல்லைக்காவல் படையினரின் எல்லையைக் கடக்கும் அத்து மீறலும் இரு தரப்பு உறவுக்கு முக்கிய சோதனையாக அமைந் தது," என்றார். "இந்தப் பிரச்சினை அரசதந்திர வழி மூலம் சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளப்பட்டது. இதிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும்," என்று வாங் யி சொன்னார். இந்திய, சீன ராணுவ வீரர்கள் எல்லையில் மல்லுக்கு நின்ற சம்பவம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முடிவுக்கு வந்த பிறகு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி முதல் முறையாக ரஷ்யா, இந்தியா, சீனா கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார்.

முத்தரப்புக் கூட்டத்தில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் (இடம்), இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் கலந்துகொண்டனர். படம்: ஏஎஃப்பி