அனுமதி மறுப்பு; கடல் விமானத்தில் மோடி பயணம்

அனுமதி மறுப்பு; கடல் விமானத்தில் மோடி பயணம்

1 mins read
5ae65d0d-67a8-4488-b52e-fcdb5051a78c
-

அகமதாபாத்: குஜராத் தேர்தலை யொட்டி அகமதாபாத் நகரில் வீதி வீதியாக வாகனத்தில் பிரசாரம் செய்யவிருந்த பிரதமர் மோடிக்கு அந்நகர காவல்துறையினர் அனு மதி வழங்க மறுத்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்திக்கும் சாலை வழி பிரசாரத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி, நீரில் மிதக்கும் 'கடல் விமானம்' மூலம் நேற்று சபர்மதி ஆற்றி லிருந்து புறப்பட்டு மக்சேனா மாவட்டத்திற்கு சென்றார். "அகமதாபாத்தில் சாலை வழியாக சென்று பிரசாரம் செய்ய எங்கள் கட்சியின் சார்பில் அனு மதி கோரினோம். ஆனால் பாது காப்புக் காரணங்களுக்காக காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. எனவே அம்பாஜி கோயிலுக்கு 'கடல் விமானம்' மூலம் செல்கிறோம். எல்லா பகுதி களிலும் விமான நிலையம் இல் லாததால் கடல் விமானத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது," என்று பாஜக வினர் கூறினர்.

சபர்மதி ஆற்றில் மிதக்கும் கடல் விமானத்தில் ஏறி பிரதமர் மோடி பிரசாரத்துக்குக் கிளம்பினார். படம்: ராய்ட்டர்ஸ்