ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை

1 mins read

புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியும் உச்சநீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இதை எதிர்த்து விலங்குகள் அமைப் பான பீட்டா, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற பீட்டாவின் கோரிக்கையை நிராகரித்தது. இதன் மூலம் வரும் புத்தாண்டில் ஜல்லிக்கட்டு நடத்த தடை ஏதும் இல்லை என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இம்முறை ஜல்லிக்கட்டு போட்டிகள் விரிவான ஏற்பாடுகளின் பேரில் சிறப்பாக நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.