குமரி: தென் மாவட்டங்களை புரட்டிப் போட்ட ஓகி புயலால் குமரி மாவட்டத்தில் இருபது லட்சம் ரப்பர் மரங்கள் சேதம டைந்துள்ளன. மேலும் பத்தாயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தமிழகத்தை தாக்கியது ஓகி புயல். இதனால் குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் சின்னாபின்னமா கின. குறிப்பாக குமரி மாவட்டத் தில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது ஓகி புயல். குமரியில் தொழில் வாய்ப்புகள் அதிகம் இல்லை.
எனவே ரப்பர் சாகுபடியில் பெரும்பாலானோர் கவனம் செலுத்தி வருகின்றனர். அம்மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இது தான் பெரிதும் கைகொடுக்கிறது. விளவங்கோடு, கல்குளம் மற்றும் தோவாளை தாலுகாவின் சில பகுதிகள் உட்பட 24 ஆயிரத்து 30 ஹெக்டர் பரப்பள வில் அங்கு ரப்பர் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. இதில் அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமான 4272 ஹெக்டர் பரப்பளவில் ரப்பர் சாகுபடி உள்ளது. இருபது பெரிய தோட்டங் களைத் தவிர்த்து சிறு குறு விவசாயிகள் தான் அதிகமாக ரப்பர் சாகுபடி செய்துள்ளனர்.

