மதுரை: ஆர்கே நகர் இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், ஆளும் கட்சி தோல்வி அடைந்தால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் இடைத்தேர்தலை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் முயன்று வருவதாக குற்றம்சாட்டினார். ஒகி புயலால் பாதிப்படைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், மீனவர் குடும்பங்களுக்கு நிவார ணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"புயல் பாதிப்புகளில் இருந்து மீள கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசிடம் ரூ. 1,840 கோடி கேட்டுள்ளார். அதே போல் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். "புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களை ஆளுநர் பார்வையிடலாம். ஆனால் அரசு அதிகாரிகளுடன் ஆலோசிப்பது போன்ற விவகா ரங்களில் தலையிடக் கூடாது. இந்த வி ஷயத்தில் தமிழக முதல் வர் மவுனம் காக்காமல் மத்திய அரசிடம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்," என்றார் திருமாவளவன்.

