முன்னாள் முதல்வர் மதுகோடா குற்றவாளி என தீர்ப்பு

முன்னாள் முதல்வர் மதுகோடா குற்றவாளி என தீர்ப்பு

1 mins read

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத் தில் நிலக்கரி சுரங்கங்களை தனி யார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ள தாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் மதுகோடா உள்பட அறுவர் மீது குற்றம் நிரூ பணமாகி உள்ளதாக நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். லஞ்சம் பெற்றுக்கொண்டு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நிலக்கரி சுரங்கங்களை முறை கேடாக ஒதுக்குவதற்கு மதுகோடா சதித்திட்டம் தீட்டியிருந்தது க ண் டு பி டி க் க ப் ப ட் டு ள் ள தா க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தில் நடந்து வந்த வழக்கு விசா ரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர் பில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் குப்தா, ஜார்கண்ட் முன்னாள் தலைமைச் செயலாளர் அசோக் குமார் பாசு உள்ளிட்ட அறுவர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட மதுகோடா உள்ளிட்ட 15 பேரில் நால்வர் குற்றமற்றவர்கள் என்று கூறி அவர்களை விடுவிப்பதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாக நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடா (வலது) உள்ளிட்ட அறுவர் மீதான குற்றம் நிரூபணம் ஆகியுள்ளது. இதையடுத்து இன்று டிசம்பர் 14ஆம் தேதி இவர்களுக்கான தண்டனையின் விவரம் அறிவிக்கப்பட உள்ளது. படம்: ஊடகம்