மீண்டும் தாக்கிய இலங்கைக் கடற்படை

மீண்டும் தாக்கிய இலங்கைக் கடற்படை

1 mins read

ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின ரின் தாக்குதல் நடவடிக்கை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மீனவர் கள் மீது நேற்று கற்கள், கண் ணாடித் துண்டுகளை வீசி தாக்கு தல் நடத்தியுள்ளது இலங்கைக் கடற்படை. கடல் எல்லையைக் கடந்து வந்து மீன்பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் மீது அவ்வப் போது இலங்கைக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவ தும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை இந்திய எல் லைக்கு உட்பட்ட பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப் போது ஏழு சுற்றுக்காவல் படகு களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்கள், கண்ணாடிகளை வீசி சரமாரியாகத் தாக்குதல் நடத்திய தாகக் கூறப்படுகிறது.