சென்னை: ஆர்கே நகர் இடைத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின் றன. அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்றில் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்குத்தான் வெற்றி கிடைக்கும் எனத் தெரிய வந்துள்ளது. லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அண்மையில் நடத் திய கருத்துக்கணிப்பு முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளி யாகின. ஆர்கே நகர் இடைத்தேர் தலில் திமுக வெற்றி பெறும் என்றும், அதிமுகவை முந்தி தின கரன் 2ஆம் இடம் பிடிப்பார் என் றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமை யில் மக்கள் ஆய்வகத்தினர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு கள் தற்போது வெளியாகி உள் ளது. இந்த இடைத்தேர்தலில் தினகரனுக்கு 35.5 விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் என்கிறது புதிய கணிப்பு. எனவே அவரே வெற்றிவாகை சூடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினகரன். படம்: ஊடகம்

