கோவை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் தண்டனை அனுபவித்து வருபவர்கள் மீது பொய் வழக்கு புனையப்பட் டுள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி நியாயம் கிடைத்தும் என்ன பலன் எனக் கேள்வி எழுப்பினார். "ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளான சாந்தன், பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட வர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு உண்மைக் காரணங்களின் அடிப்படையிலானது அல்ல. "அவர்கள் மீது பொய் வழக்கு தான் புனையப்பட்டுள்ளது.
இனி மேல் அவர்கள் ஏழு பேரும் நிரபராதி என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் இழந்த 26 ஆண்டு களுக்கும் வேதனைகளுக்கும் யார் பதில் சொல்வது?" எனக் கேள்வி எழுப்பினார் வைகோ. இந்த வழக்கில் தமிழக அரசு முன்மொழிந்ததை, மத்தியில் உள்ள பாஜக அரசு பரிசீலனை செய்து 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரும் 26 ஆண்டுகள் வேதனை யுடன் கூடிய சிறைவாசத்தை அனுபவித்து உள்ளதாகத் தெரிவித்தார். "ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் தெரிவித்த பல முக்கியமான விஷயங்கள் கவ னத்தில் கொள்ளப்படவில்லை. இதை ஆரம்பம் முதலே பலர் சுட்டிக் காட்டிய போதிலும், சம்பந் தப்பட்டவர்கள் அதை கவனத்தில் கொள்ளவில்லை என்றார்.
மதிமுக பொதுச் செயலர் வைகோ. படம்: தகவல் ஊடகம்

