கல்பாக்கம்: கடலூரில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட பிறகு சென்னைக்குத் திரும்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பாதுகாப்பு வாகனம், மாமல்லபுரம் அருகே அவ்வழியாக சாலையைக் கடந்தவர்கள் மீது மோதியதில் இருவர் மாண்டனர். இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் படுகாயமடைந்தார். கடலூர் வண்டிப்பாளையத்தில் அவர் துப்புரவு பணிகளை மேற்கொண்டார். அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்தபோது அங்கிருந்த கீற்று மறைப்பை அவர் திறந்து பார்த்ததாகவும் அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த இளம்பெண் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பார்த்து அலறியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை ஊர்மக்கள் சுற்றி வளைத்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரை பாதுகாப்பாக மீட்டனர். இந்நிலையில் ஆளுநர் பாதுகாப்பு வாகனம் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதி இருவர் மரணம்
1 mins read

