சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 'நாம் தமிழர் கட்சி' சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். இதையொட்டி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது 'நாம் தமிழர் கட்சி' தொண்டர்களும் பறை அடித்து பிரசாரத்தில் பங்கேற்றனர். பின்னர் பேசிய சீமான், "திராவிடக் கட்சிகளை நம்பி மக்கள் ஏமாந்துபோய் உள்ளனர். மக்களுக்குப் பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்க எல்லா கட்சிகளும் சுற்றி வருகின்றன. ஆனால் மக்கள் 'நாம் தமிழர் கட்சிக்கு' வாக்களிக்க வேண்டும்," என்றார்.
சீமான்: திராவிட கட்சிகளிடம் மக்கள் ஏமாந்துவிட்டனர்
1 mins read

