சென்னை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு ஊழியர்கள் இறந்தனர். கிரிவலப்பாதை விரி வாக்கத் திட்டப்பணி ரூ.65 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரமணா ஆசிரமத்தின் அருகில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது அதன் வெளிப்புற சுற்றுச்சுவர் எதிர்பாரா விதமாக இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த மூன்று ஊழியர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே சம்பவத்தை நேரில் பார்வையிட்ட திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ரமண ஆசிரம விபத்தில் இருவர் மரணம்
1 mins read

