ரயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு

ரயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு

1 mins read

புதுடெல்லி: ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக் கள் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரி ழந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு 'நிர்பயா நிதி' என்ற பெய ரில் நிதியை ஒதுக்கீடு செய்து 900 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிட்டது. இதுதொடர்பாக, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகை யில், "பெண்கள் பாதுகாப்பு விவ காரத்தை எதிர்கொள்ளும் வகை யில் இரு விஷயங்களில் மிக முக்கியமாக கவனம் செலுத்த உள்ளோம்.

"முதலில், அனைத்து ரயில் களிலும் வைஃபை இணைப்பு கிடைப்பதை உறுதி செய்வோம். இரண்டாவதாக, அனைத்து ரயில்வே நிலையங்கள் மற்றும் நீண்ட தொலைவு செல்லும் ரயில் களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த உள்ளோம். "வரும் 2018ஆம் ஆண்டை பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகள், குறிப்பாக, மனிதக் கடத்தலுக்கு எதிராக இணைந்து போராடும் ஆண்டாக நாங்கள் அர்ப்பணித்து செயல்படுவோம். "இதனை அனைத்து ரயில்வே பிரிவுகளிலும் நாங்கள் மேற் கொள்வோம். மத்திய அரசு தேவை யான உதவிகளைச் செய்து வரு கிறது," என்று கூறியுள்ளார்.