கொழிஞ்சாம்பாறை: கேரள மாநிலம் கொச்சியிலுள்ள அனைத்துலக விமான நிலை யத்திற்கு நேற்று முன்தினம் வந்த வெனிசுவேலா நாட் டைச் சேர்ந்த இளைஞர் மீது அதிகாரிகள் சந்தேகப்பட்ட னர். இதனையடுத்து அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவரது பெயர் கார்லி சபரியேல் காஸ்போ (வயது 36) என்பது அப்போது தெரிய வந்தது. மேலும் மயக்க மருந்துகளை வயிற்றுக்குள் வைத்து கடத்திவருவதாகக் கூறினார். இதனையடுத்து அவரை கலம்பச்சேரி அரசு மருத்துவ மனைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்று சோதித் ததில் அவரது வயிற்றுக்குள் 100 பிளாஸ்டிக் குப்பிகள் இருந்தன. இதனை மலத்து வாரத்தின் மூலம் மருத்துவர் கள் வெளியேற்றினர். அந்தக் குப்பிகளில் 1 கிலோ கோக்கைன் என்னும் போதைப்பொருள் இருந்தது. அதன் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.5 கோடி என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வயிற்றுக்குள் ரூ.5 கோடி போதைப்பொருள்
1 mins read

