பெரும் தீ; 100 கடைகள் கருகின

பெரும் தீ; 100 கடைகள் கருகின

1 mins read

இந்தூர்: மத்தியப் பிரதேசத்திலுள்ள போபாலின் பைராகர் ஹில் நகர் அருகே பிரபல தனியார் கடைத் தொகுதி வளாகம் ஒன்று உள்ளது. அந்த வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந் தன. நேற்று முழுவதும் தொடர்ந்து கரும்புகை வெளியேறிக் கொண்டி ருந்ததால் வளாகம் அமைந்துள்ள பகுதி அபாயகரமானது என அறிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனங்களின் உதவி யுடன் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடினர். ஆனால் ஐந்து மணி நேரமாகப் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. தீ விபத்தால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக கடையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் வெடித்துச் சிதறின.