கொள்ளையடித்ததில் சிறு தொகையை வாக்காளர்களுக்கு கொடுக்கும் ஆட்சியாளர்கள்: மு.க.ஸ்டாலின்

கொள்ளையடித்ததில் சிறு தொகையை வாக்காளர்களுக்கு கொடுக்கும் ஆட்சியாளர்கள்: மு.க.ஸ்டாலின்

1 mins read

சென்னை: வெல்லத்தில் பிள்ளை யார் செய்து, அதில் ஒரு பகுதியைக் கிள்ளி, அந்தப் பிள்ளையாருக்கே படைப்பது போல மக்களின் பணத்தை கொள்ளை அடித்து அதில் சிறு தொகையை வாக்காளர்களுக்கு கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என திமுக செயலர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் ஆர்கே நகர் வாக்கா ளர்களுக்கு எழுதியுள்ள கடிதத் தில், அத்தொகுதி மக்கள் எடுக்கும் முடிவுதான், இன்னும் சில மாதங்களில் வர உள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஏற்பட உள்ள மாற்றத்திற்கான துவக்கப் புள்ளியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். "சிலர் ஆர்கே நகர் மக்களை விலை பேசி, தம் பக்கம் திருப்ப அரசு இயந்திரத்தின் துணையுடன் செயல்பட முயற்சிக்கின்றனர். இதை முறியடிக்க வேண்டியது திமுகவினரின் கடமை. "அதிமுக ஆட்சியில் இருண்டு கிடக்கும் தமிழகத்தில் இந்த இடைத்தேர்தல், ஆட்சி மாற்றத் திற்கு அடையாளமாக புது வெளிச்சத்தை பாய்ச்சட்டும்," என ஸ்டாலின் கூறியுள்ளார்.