சென்னை: தமிழக ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி தலைமை யிலான மாநில அரசு பாஜகவை எதிர்க்கப் பயப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார். "மாநில அரசு நம் தயவில்தான் ஆட்சி நடத்துகிறது என்று ஆளு நர் கருதுகிறார் போலும். மாநில அமைச்சர்களோ இன்றுவரை ஆளுநரின் ஆய்வு குறித்து வாய் திறக்கவில்லை. தற்போதைய அரசு பினாமி ஆட்சி என்பதை நிரூபித்து வருகின்றனர்.
"தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதுகுறித்த தகவலை அதிபருக்கு ஆளுநர் அனுப்பலாம். ஆனால் ஒன்றுமே நடக்காத சாதாரண சூழலில் மத் திய அரசின் திட்டங்களின் செயல் பாட்டில் தலையிட வேண்டிய அவ சியமே இல்லை," என்று ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

