புதுடெல்லி: கடும் பனிப்பொழிவின் காரணமாக டெல்லியில் 15 ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்ற நிலையில் 12 ரயில்களின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் பாதை சரியாக தெரியாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வானிலை ஆய்வு மையத் தகவலின்படி நேற்று காலையில் டெல்லியில் 94% ஈரப்பதம் பதிவாகி இருந்தது. உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசத்தில் பொழியும் மழையின் காரணமாக வெடவெடக்கும் குளிர் நிலை மக்களை வாட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பனியால் ரயில்கள் தாமதம், ரத்து
1 mins read

