லக்னோ: செல்ஃபி மோகத்தால் உலகெங்கிலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள சைனிக் விகார் பகுதியைச் சேர்ந்த இரு வாலிபர்கள் 150 அடி உயரம் கொண்ட தண்ணீர் தொட்டியின்மேல் நின்று செல்ஃபி எடுக்கமுயன்றபோது நிலைதடுமாறி அந்த தண்ணீர் தொட்டிக்குள்ளேயே விழுந்து உயிரிழந்தனர். இருவரும் 'அனிமேஷன்' படித்து வருகின்ற சோஷிட் சிங், ரிஷப் சர்மா என்பது தெரியவந்துள்ளது.
150 அடி தண்ணீர் தொட்டி மீது நின்று செல்ஃபி எடுத்த இளையர்கள் பலி
1 mins read

