இமாச்சலப் பிரதேசம், குஜராத்தில் பாஜக வெற்றி

இமாச்சலப் பிரதேசம், குஜராத்தில் பாஜக வெற்றி

1 mins read

புதுடெல்லி: குஜராத், இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர் தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித் துள்ளது. இவ்விரு மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள அமோக வெற்றி யைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதி களில் நேற்றிரவு சிங்கப்பூர் நேரம் 8 மணி நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் பாஜக 99 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சி 79 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஒரு தொகுதியில் முன்னணியில் இருந்தது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வரும் பாஜக இம்முறையும் ஆட்சி யைப் பிடித்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 6வது முறையாக அம் மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் திற்கு கடந்த மாதம் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடை பெற்றது. நேற்று இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் வெற்றி பெற்று இருப் பதன் மூலம் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.