குமரி நிலவரம்: 16 பேர் பலி; 357 மீனவர்களைக் காணவில்லை

குமரி நிலவரம்: 16 பேர் பலி; 357 மீனவர்களைக் காணவில்லை

1 mins read

குமரி: ஓகி புயலால் பெரும் சேதங்களை எதிர்கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் 357 மீனவர்களைக் காணவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை 16 எனவும் 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. அம்மாவட்டத்தில் 1,096 வீடுகள் முழுமையாக இடிந்துவிட்ட நிலையில், 5,130 வீடுகள் ஓரளவு சேதமடைந்து உள்ளன. நெல் விவசாயிகள் 4,000 பேரும் வாழை, கிழங்கு, ரப்பர் விவசாயிகள் 22,102 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,579 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.