தென்காசி: பணப்பட்டுவாடா புகாருக்காக ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யக்கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றார். "தேர்தலை ரத்து செய்வதை விட பணப்பட்டுவாடா செயலில் ஈடுபடும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கும்," என்றார் திருமாவளவன்.
திருமா: பணப்பட்டுவாடாவுக்காக் தேர்தலை ரத்து செய்யக்கூடாது
1 mins read

