சேலத்திலும் ஆளுநர் ஆய்வு: எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி

சேலத்திலும் ஆளுநர் ஆய்வு: எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி

1 mins read

சேலம்: அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடக்கூடாது என எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சேலம் சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அங்குள்ள புதிய பேருந்து நிலையத்தில் நேற்று ஆய்வு மேற் கொண்டார். பேருந்து நிலையத்தைச் சுற்றிப் பார்த்த அவர், அங்கிருந்த பயணிகளி டம் கை குலுக்கினார். தூய்மையின் அவசியம் குறித்து அவர் பயணிகளிடம் விளக்கினார். "பேருந்து நிலையம் சுத்தமாக இருக்கிறது.

அதேபோல் சேலம் மாநகரையும் தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்," என்று வலியுறுத்திய ஆளுநர் பன்வாரிலால், பயணிகளிடம் தூய்மை தொடர்பான சில துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். அவற்றில் இடம்பெற்றுள்ள வாச கங்களைப் படித்துக்காட்டும்படி அவர் கேட்டுக்கொண்டபோது, பொது மக்களும் சிரித்தபடியே படித்துக் காண்பித்தனர். பேருந்து நிலையத்தில் குவியும் குப்பைகள் எவ்வாறு அப்புறப்படுத்தப் படுகிறது என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், குப்பை அள்ள பயன்படுத்தப்படும் நவீன இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனத்தையும் பார்வையிட்டார். இதற்கிடையே ஆளுநரின் இச் செயல்பாட்டைக் கண்டித்து போராட்டம் நடத்த தமிழக எதிர்க்கட்சிகள் திட்ட மிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.