50 அடி பள்ளத்தில் விழுந்த கார்: ஐயப்ப பக்தர்கள் நால்வர் பலி

50 அடி பள்ளத்தில் விழுந்த கார்: ஐயப்ப பக்தர்கள் நால்வர் பலி

1 mins read

மதுரை: விபத்தில் சிக்கி நான்கு ஐயப்ப பக்தர்கள் பலியான சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ரகு. 35 வயதான அவர் அங்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய் வாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது நண்பர்கள் நால்வருடன் காரில் சபரிமலை சென்றி ருந்தார் ரகு. தரிசனம் முடிந்து நேற்று முன்தினம் ஐந்து பேரும் செங்கோட்டை வழியாக மதுரைக்கு வந்துகொண்டி ருந்தனர். அப்போது திருமங்கலம் மறவன் குளம் பகுதியில் உள்ள பாலத்தில் சென்றபோது அவர்களது கார் திடீ ரென கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடியது. பின்னர் பாலத்தின் சுவரை உடைத்துக்கொண்டு கீழே கவிழ்ந்தது. 50 அடி பள்ளத்தில் விழுந்ததால் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ரகு உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். சுப்பராயலு என்பவர் மட்டும் படுகாயமடைந்தார். அவர் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.