அன்பழகன்: மக்களைத் திசைதிருப்ப முயல்கிறது பாஜக

அன்பழகன்: மக்களைத் திசைதிருப்ப முயல்கிறது பாஜக

1 mins read

சென்னை: மத்தியில் உள்ள பாஜக அரசு மக்களின் மனதை திசைதிருப்பும் வகையில் செயல்பட்டு வருவதாக திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் சாடியுள்ளார். திராவிடர் இனம் தலைதூக்கக் கூடாது என்பதை லட்சியமாக கொண்டு பாஜக ஆட்சி நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அன்பழகனின் 96ஆவது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், மத்தியில் உள்ள ஆட்சியாளர்களிடம் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். "சமூகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக மத்திய அரசு கூறிக் கொள்கிறது. ஆனால் அவர்களின் உள்மன சிந்தனை வேறுவிதமாக உள்ளது," என்றார் அன்பழகன். முன்னதாகப் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திரைமறைவில் சூழ்ச்சிகள் பின்னப்படுவதாகத் தெரிவித்தார். 2017-12-21 06:00:00 +0800