சென்னை: தமிழகத்திற்காகவே தவ வாழ்வு வாழ்ந்து, தமிழக மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஜெயலலிதாவை நினைவில் கொண்டு ஆர்கே நகர் மக்கள் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்கவேண்டும் என அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். இருவரும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் அக்கட்சியின் எம்ஜிஆரின் தூய தொண்டர் எனவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.
ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்
1 mins read

