முன்னாள் தமிழக முதல்வர் ஜெய லலிதாவின் மறைவால் காலியான சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 258 வாக்குச்சா வடிகளிலும் காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த நிலையில், வாக்காளர் களுக்குப் பணம் தந்து வாக்கு களைப் பெறுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பெருமுயற்சி மேற்கொண்டாலும் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி புதுப் புது உத்திகள் மூலம் சில கட்சிகள் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
அந்த வகையில், வாக்காளர் களுக்கு 20 ரூபாய் டோக்கன் தந்த 15 பேரை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். ஆளும் அதிமுகவும் சுயேச்சை யாகப் போட்டியிடும் தினகரனும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இப்படி பத்து ரூபாய், 20 ரூபாய் டோக்கன் அவர்களின் புதிய உத்தி எனச் சொல்லப்படு கிறது. ஒரு வீட்டில் ஐந்து வாக்குகள் இருந்து பத்து ரூபாயும் அதற்கு மேல் இருந்தால் 20 ரூபாயும் முன் பணமாகக் கொடுத்து, அதிலுள்ள எண்ணைக் கட்சியினர் குறித்துச் சென்றதாகவும் கூறப்பட்டது. வாக்களித்தபின் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அந்த ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தால் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை தரப்படும் என்று உறுதியளிக்கப் பட்டதாகவும் சொல்லப்பட்டது.

