மகிழ்ச்சியில் காங்கிரஸ், திமுக

மகிழ்ச்சியில் காங்கிரஸ், திமுக

1 mins read
498b42d5-dcd3-4546-a643-982c8e158445
-

புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மாபெரும் ஊழல் என்று கூறப்பட்ட 2ஜி அலைக் கற்றை வழக்கில் கனிமொழி, ராசா உள்ளிட்டவர்களை விடு தலை செய்த நீதிமன்றத் தீர்ப்பை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் வரவேற்று உள்ளனர். 2ஜி வழக்கில் முக்கிய குற்ற வாளிகளாகக் குறிப்பிடப்பட்டு இருந்த ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் நேற்று விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். அந்தத் தீர்ப்பில் குற்றங்களை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தீர்ப்புக்கு திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரி வித்த முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், "2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பால் காங்கிரசுக்கு எதிரான பிரசாரம் முடிவுக்கு வந்திருக் கிறது.

திமுக தலைமையகமான அறிவாலயத்தில் கட்சித் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கும் மு.க. ஸ்டாலின். படம்: ஏஎஃப்பி