அகமதாபாத்: கிட்டத்தட்ட 8 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்திருந்த பாஜக, அப்படி எந்த ஒரு காரியத்தையும் செய்யாமல் ஏமாற்றியுள்ளது. பிரதமர் மோடி தொடர்ந்து போலி யான வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இதற்காக அவர் நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார். குஜராத்தின் வட்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் தையல் இயந்திரம் சின்னத்தில் சுயேட்சை யாகப் போட்டியிட்டு பாஜக வேட் பாளர் சக்கரவர்த்தி விஜயகுமாரை 20,000 வாக்குகள் வித்தியாசத் தில் தோற்கடித்துள்ளார் 35 வய தான தலித் சமூக ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி.
"பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துகள் மக்களுக்கு உத் வேகத்தை அளிப்பதற்குப் பதிலாக தொடர்ந்து சலிப்பையே ஏற் படுத்தி வருகின்றன. அவர் இமாலயாவிற்குச் சென்று ஓய் வெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது," என்று ஜிக்னேஷ் கூறிய கருத்து அரசியல் வட் டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
ஜிக்னேஷ் மேவானி. படம்: ஊடகம்

