சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு

1 mins read

சென்னை: கிழக்குத் திசையில் இருந்து காற்று வீச உள்ளதால் சென்னையில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்த நிலையில், அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்குத் தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் மழை இருக்கும். இந்த மழை காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவாகும் மழை அல்ல என்பதால் வெள்ளம் சூழும் அளவுக்கு கனமழையாக இருக்காது என்றும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.