கன மழை பெய்தும் கண்மாய்களில் நீரில்லாத அவலம்

கன மழை பெய்தும் கண்மாய்களில் நீரில்லாத அவலம்

1 mins read

ஆலங்குடி: தமிழகத்தில் கண்மாய்கள் தூர்வாரப்படாததால் மழை பெய்தும் வறண்டு காணப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் குளங்கள், கண்மாய்கள் நிரம்பாமல் வறண்டு போய் ஆடு, மாடுகளுக்கான மேய்ச்சல் தரையாக மாறியுள் ளது. அப்பகுதி விவசாயிகள் சுமார் 600 அடி முதல் 1000 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து அதிலிருந்து நெல், கரும்பு, சோளம், கடலை, எள், உளுந்து, வாழை, காய்கறிகள் மற்றும் பூ ஆகியவற்றைப் பயிரிட்டு வந்தனர்.

இப்போது ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர் வற்றிவிட்ட நிலையில், அனைத்து விவசாய நிலங்களும் விவசாயம் செய்ய முடியாமல் இருந்து வருகின்றன. குளங்கள், கண்மாய்கள் நிரம்பாமல் வறண்டுபோய் ஆடு, மாடுகளுக்கான மேய்ச்சல் தரையாக மாறியுள்ளது. நீர்வரத்து வாரிகளைத் தூர்வார வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாததே இதற்கு காரணம் என்கின்றனர் விவசாயிகள்.