'அரசியல் பனிக்குடத்தில் வைத்து என்னைப் பத்திரப்படுத்திய தாய் நீங்கள்'

'அரசியல் பனிக்குடத்தில் வைத்து என்னைப் பத்திரப்படுத்திய தாய் நீங்கள்'

2 mins read
84f0bcfc-9f07-47f5-b981-def62df2cb0b
-

சென்னை: 2ஜி அலைக்கற்றை வழக்கிலிருந்து விடுதலையான முன்னாள் அமைச்சர் ஆ.ராசா (படம்) திமுக தலைவர் கலைஞ ருக்குக் கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆறாண்டுகளாக நடை பெற்ற 2ஜி அலைக்கற்றை வழக் கில் குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்புத் தவறிவிட்டது எனக் கூறி முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச் சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட கு ற் ற ம் சா ட் ட ப் ப ட் ட வ ர் க ள் அனைவரையும் நீதிபதி ஓ.பி. ஷைனி விடுதலை செய்து உத்தர விட்டார்.

இதனையடுத்துத் திமுக தலைவர் கலைஞ ருக்கு முன்னாள் அமைச்சர் ஆ. ராசா உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறி யிருப்பதாவது: "அரசியல் பனிக்குடத்தில் வைத்து என்னைப் பத்திரப்படுத்திய தாயான உங்களுக்குத் தீர்ப்பைக் காலடியில் வைத்து வணங்குகி றேன். மீண்டும் உங்களின் வாச கங் கள் என்னை வந்து வருடுகின் றன. குறைகூறிய எவருக்கும் நெஞ் சம் என்ற ஒன்றே இல்லை, என்றா லும் நீதி நமக்குக் கிடைத்திருக் கிறது. அலைவரிசைப் புயலின் கோரத்தாக்குதல் தனி மனிதர்களை மட்டுமல்ல, இயக்கத் தையும் களங்கப்படுத்தியது.

"மனிதர்களை அல்லாமல் தத்து வார்த்தம் கொண்ட இயக்க மும் 7 ஆண்டுகள் களங்கப்படுத்தப் பட்டன. "2ஜி அலைக்கற்றை வழக்குத் தீர்ப்புக்காக டெல்லி செல்கிறேன், என்று சொன்னபோது, உங்கள் உதடுகள் சரி என்று உச்சரித்தும் சத்தம் வரவில்லை என்றாலும், வலதுகரம் உயர்த்திப் புன்ன கையோடு வாழ்த் தி னீர்கள். "2ஜி வழக்கின் தீர்ப்பை அடுத்து நித்திரை கொள்ளாமல் நடுநிசியில் கடிதம் எழுதினேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.